search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர் கூட்டம்"

    • மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு நகரியம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் சேர்ந்த மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,

    சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவாரூர்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்;

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை,

    கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் அவர் பேசியாவது.-

    விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
    • விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் கூறினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ் பிரடரிக்கிள மண்ட் தலைமை வைத்தார். உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயிர்களை தாக்கும் காட்டு விலங்குகள் மற்றும் பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது அதற்கு விவசாயிகளுக்கு வனத்துறை யினர் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் வர விடாமல் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். தமிழக அரசு சேதமடைந்த கரும்பு மற்றும் உணவுப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் வேளாண்மைதுறை மற்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு துறையில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மன்னார்குடியில் 13-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடக்கிறது.
    • யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியப்பதாவது:-

    மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-24ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    • திருவாரூரில் 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
    • மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்

    திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    திருவாரூர் கோட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி,

    குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்புடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை வாங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் புகார்தாரர் மற்றும் எதிர்புகார்தாரர் ஆகிய இருவரையும் அழைத்து சமரசம் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    நேற்று நடைபெற்ற முகாமில் 220 மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    காலையில் திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் மாலையில் நாமக்கல், ராசிபுரம் என 4 உட்கோட்டத்திற்கு உட்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புகார் மனுக்கள் அனுப்பிய மனு தாரர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட நிலையில் சில மனுக்கள் தொடர் நடவடிக்கையில் இருப்பதால் அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    நாகப்பட்டினம்:

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார் தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார் தெரிவிக்கலாம். அதன்படி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில், வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் நுகர்வோர் கலந்து கொண்டு பொது விநியோகம் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மின் வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மதுரை

    உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் நாளை (31-ந்தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

    இதில் செயற்பொறியாளர் மங்களநாதன் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

    இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. கூட்டத்தில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும். எனவே விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • தையல் எந்திரங்களை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுசெய்த உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×